Friday, December 31, 2010

ஜனனம்....!



சத்தியமாய்
என்னை மறக்க வைத்துவிட்டாய்...

தொலைந்திருந்த
என் பிம்பம்
உன் நிழல்பட்டு
பிரதிபளித்தது கண்ணாடியில்!

பிரகாரத்தின் உச்சியில்
பட்டுத்தெறித்த
மழைத்துளியில்
கண் விழித்துக் கொண்டது சர்வமும்...!

நீ தான்
எல்லாமுமான
என் இதயம்
தடைப்பட்டிருந்தது

மறுபடியும் எழுகிறது
உன் உதட்டின்
லேசான துடிப்பில்
இனி கிளம்பலாம்
வீரியமான படைப்புகள்
உன்னிடம் இருந்து எனக்கு....!

-ரா.நாகப்பன்.

Monday, May 3, 2010

ஈரமண்ணின் நேசத்துடன்......

அன்பார்ந்த தமிழ் இதயங்களே....
பணிவன்புடன் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு எழுதுகிறேன்
நலமா....??????????
தற்சமயம் சென்னையில் வசிக்கிறேன்....
ஒரு முக்கிய செய்தி உள்ளது.


" ஈரமண்ணின் நேசம் " என்ற ஒரு மாத அச்சு இதழை பதிவுசெய்து வரும் ஜூன் 2010முதல் கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறேன்.
நண்பர்கள் தங்களின் படைப்புகளை இதழுக்கு அனுப்பலாம் ....
மண் மணம் குறித்த எந்த படைப்பும் வரவேற்கிறேன்...


அது மட்டுமில்லாமல் இதழில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் என்னை தொடர்புகொள்ளலாம்...


சென்னையில் விளம்பர நிறுவனமாகவும் தொலைகாட்சி நிகழ்ச்சி தயாரிப்புக்கான பணிகளும் தற்போது நான் மேற்கொண்டிருப்பதால் திரை துறை ஆசையும் எழுத்து மீது அதீத ஈடுபாடும் உள்ள அனபர்கள் தொடர்புக்கொள்ளலாம்....
வெளி நாடுகளில் வசிக்கும் நண்பர்கள் கௌரவ பொறுப்பிலும் படைப்புகளை அனுப்பியும் பங்களிக்கலாம்....

தொடர்புகொள்ள:


ரா.நாகப்பன்,

எச்-48, திருப்பூர் குமரன் தெரு,
எம்.எம்.டி.ஏ., காலனி,
அரும்பாக்கம்,
சென்னை-600106
தமிழ்நாடு

இநதியா......



ஈரமண்ணின் நேசத்துடன்,





இந்தியா

neelam enbathu song