கணக்கு எடுக்கும்
கனகா டீச்சருக்கு
காச நோயாம்!
பி.டி.மாஸ்டர் டேவிட்டுக்கு
போன மாசம்தான்
கேன்சர் ஆப்பரேசன் முடிந்ததாம்.....
தமிழய்யா தங்கவேலுக்கு
சக்கரைநோயால்
இடது காலைஎடுத்து விட்டார்களாம்.....
ஹெட்மாஸ்டர் ராமசுப்ரமணியத்தை
மனநலமருத்துவமனையில்
சேர்த்திருக்கிறார்களாம்....
-நோயுடன்
அவதிப்படுவதாகவே
சித்தரிக்கும் நண்பர்கள்
ஆசிரியர் பணிக்கு
விண்ணப்பங்களை
நிரப்பிக்கொண்டிருப்பதாக கேள்வி!
இருந்தாலும்
இருந்தாலும்
சொல்ல மறப்பதில்லை
வெளிநாடுகளில்
பேரன் பேத்திகளுடன்
வீடியோகேம் விளையாடும்
ஆசிரியர்களையும்!
1 comment:
செப்டம்பர்-5 தேதி இந்தியாவில் ஆசிரியர் தினம்...
கவிதகள் அருமை...
வாழ்த்துகள் நாகப்பன்
Post a Comment