Saturday, March 15, 2008
சந்திப்புகள் அரிதானவை.....
உனக்கும் எனக்குமான
சந்திப்புகளில்
தண்டவாளங்களுக்குப் பக்கத்தில்
விட்டுப்போன கொலுசின் ஓசை தேடி
ஒவ்வொரு முறையும்
ரயில் போன பிறகும் பார்கிறேன்!
லெவல் கிராசிங்கில்
பேருந்து ஜன்னலில் இருந்து
எட்டிப் பார்த்து போகும்
உன் முகம் பார்க்க வேண்டி
என் மிதிவண்டி மிதிப்பட்ட நாட்களில்
உன் சிறகுகள்
பனியில் நனைந்திருக்கும்.....
என்பதுகூட தெரியாமல் பார்த்துவிட்டு போகிறேன்!
உனதேயான வாசிப்புகளில்
எனது பெயரின் வாசனை
ஒருவேளை இம்சைப்படுத்தி இருக்கலாம் உன்னை....
உனது ஞாபகமும்
உன் ஈரம் தொட்ட கூந்தலசைவும்
எனக்குள் மூட்டிய தீயில்
குளிர்காய்ந்து கொண்டிருக்கலாம் நீ
என்பதான என் புரிதல்
அந்நியப்படுத்தவே செய்திருக்கிறது
ஒவ்வொருமுறையும்
என்னிடமிருந்து உன்னை......
Friday, March 14, 2008
அவ்வளவு தான் முடிந்தது.....
கண்ணீர் வராமல்
வெங்காயம் அறிகிறாய்.....
காம்பஸ் தேவையில்லை உனக்கு
வட்டமாய் தோசைச்சுட!
பதினாறு கஜத்தையும்
பாந்தமாய் சுற்றிக் கொள்கிறாய்....
நடுவோ, கோணலோ
வகிடெடுக்கா விட்டாலும்
வாய்த்து விடுகிறது அழகாய் பின்னிக்கொள்ள!
பம்புசெட்டோ, மணியக்காரர் கிணறோ
குளிக்க முடிகிறது பயமில்லாமல்....
இடித்து கட்டிய வீட்டிற்குள்
விளக்கேற்றவும்,
புள்ளிவைக்கா விட்டாலும்
வாசலில் கோலமிடவும் பழகி இருக்கிறாய்!
மருதாணி அரைக்கும் போதே
சிவக்க துவங்கி விடுகிறது விரல்கள்......
சோகமாய் சொல்லிக்கொள்கிறாய்
"வந்ததாக ஞாபகம் இல்லை
அந்த மூன்று நாள் வலி
மீசை மழிக்கிற போது மட்டும்
தொட்டுச் செல்கிறதே உதிரம்"
ஷேவிங் கிரீமாய் நுரைக்கிறது
ரணமான உன் வார்த்தை........
அவ்வளவு தான் முடிந்தது.....
கண்ணீர் வராமல்
வெங்காயம் அறிகிறாய்.....
காம்பஸ் தேவையில்லை உனக்கு
வட்டமாய் தோசைச்சுட!
பதினாறு கஜத்தையும்
பாந்தமாய் சுற்றிக் கொள்கிறாய்....
நடுவோ, கோணலோ
வகிடெடுக்கா விட்டாலும்
வாய்த்து விடுகிறது அழகாய் பின்னிக்கொள்ள!
பம்புசெட்டோ மணியக்காரர் கிணறோ
குளிக்க முடிகிறது பயமில்லாமல்....
இடித்து கட்டிய வீட்டிற்குள்
விளக்கேற்றவும்
புள்ளிவைக்கா விட்டாலும்
வாசலில் கோலமிடவும்
பழகி இருக்கிறாய்!
மருதாணி அரைக்கும் போதே
சிவக்க துவங்கி விடுகிறது விரல்கள்......
சோகமாய் சொல்லிக்கொள்கிறாய்
"வந்ததாக ஞாபகம் இல்லை
அந்த மூன்று நாள் வலி
மீசை மழிக்கிற போது மட்டும்
தொட்டுச் செல்கிறதே உதிரம்"
ஷேவிங் கிரீமாய் நுரைக்கிறது
ரணமான உன் வார்த்தை........
Wednesday, March 12, 2008
இன்றைய எனது கவிதை.........
யாரும் அமராத
ரயில் பெட்டியில்
பயணிக்கும் வண்ணத்து பூச்சியாய்
கனமான நிமிஷத்தில் இருந்து
உருவாகும் கவிதையாய் இருக்கிறேன் எப்போதும்.....
சுழலும் மின்விசிறியின்
இறக்கையின் வேகம்
இயலாதாகினும் படபடக்க முடிகிறது
என்பதான சுயத்தில்
தண்டவாளத்திலும்
அமர்ந்து போக முடிகிறது என்னால்!
இன்னும்
வயதுக்கே வராத சிறுமி ஒருத்தியின்
அளவுக்கு மீறிய வளர்ச்சியில்
எச்சில் ஒழுகும்
நடுத்தர வயதுக்காரனின்
காமத்தில் கொப்பளித்து
வெளி கிளம்புகிறது
அடையாளம் தொலைத்த ரௌத்திரம்!
நிறம் இழக்கிற
கபடத்தில்
வெள்ளையாய் தூசியாய்,
இருந்து விட்டு போகட்டுமே எப்போதும் மேனி.....
அழுக்கு பிச்சைக்காரியின்
உப்பிய வயிற்றுக்குள்
ஒளிந்துகொண்டிருக்கும் கந்தலாக
இயல்பாகவே இருந்துவிடுகிறேன்
எறும்புகள் மொய்க்காதவரை ......
வண்ணம் இல்லாவிட்டாலும்
பூச்சி என்று சொல்வதில்லை யாரும்!
Subscribe to:
Posts (Atom)
-
வீதியில் இருந்து அன்னியப்பட்டிருந்தது அந்த அறை நம்மை இணைத்த நம் வீட்டைப்போல்! பழகிய சாலை பார்த்த முகங்கள் அடையாளங்களை வைத்தே அடைந்துவிடுகிறோ...
-
தீமூட்டிகுளிர் காய்கிறதுவாழ்க்கை மார்கழி கனவு ...! புன்னகையுடன் புகைப்படம் புழுதி படிந்து.... தெரு கடக்கிறது நதி கண்களில் ஈரம்! மனசின் ஜன்னல...
-
சத்தியமாய் என்னை மறக்க வைத்துவிட்டாய்... தொலைந்திருந்த என் பிம்பம் உன் நிழல்பட்டு பிரதிபளித்தது கண்ணாடியில்! பிரகாரத்தின் உச்சியில் பட்டுத்த...