Wednesday, March 12, 2008

இன்றைய எனது கவிதை.........








யாரும் அமராத
ரயில் பெட்டியில்
பயணிக்கும் வண்ணத்து பூச்சியாய்
கனமான நிமிஷத்தில் இருந்து
உருவாகும் கவிதையாய் இருக்கிறேன் எப்போதும்.....

சுழலும் மின்விசிறியின்
இறக்கையின் வேகம்
இயலாதாகினும் படபடக்க முடிகிறது
என்பதான சுயத்தில்
தண்டவாளத்திலும்
அமர்ந்து போக முடிகிறது என்னால்!

இன்னும்
வயதுக்கே வராத சிறுமி ஒருத்தியின்
அளவுக்கு மீறிய வளர்ச்சியில்
எச்சில் ஒழுகும்
நடுத்தர வயதுக்காரனின்
காமத்தில் கொப்பளித்து
வெளி கிளம்புகிறது
அடையாளம் தொலைத்த ரௌத்திரம்!

நிறம் இழக்கிற
கபடத்தில்
வெள்ளையாய் தூசியாய்,
இருந்து விட்டு போகட்டுமே எப்போதும் மேனி.....
அழுக்கு பிச்சைக்காரியின்
உப்பிய வயிற்றுக்குள்
ஒளிந்துகொண்டிருக்கும் கந்தலாக
இயல்பாகவே இருந்துவிடுகிறேன்
எறும்புகள் மொய்க்காதவரை ......

வண்ணம் இல்லாவிட்டாலும்
பூச்சி என்று சொல்வதில்லை யாரும்!

4 comments:

அன்பேசிவம் said...

vaalthukkal, naagappan. ungaludaya kavithaikalil thlivu irukinrathu. melum vaalvil vetri pera anbudan vallththukiren.

ungalukku siramamillai enil ungaludaya padaippukkalai enakku anuppungal. naan enathu nanbarkaludan pakirnthu kolkiren.

ரா.நாகப்பன் said...

நன்றி முரளி,
தங்களின் பார்வை இடலுக்கும், விமர்சனத்திற்கும் அன்பான நன்றிகள் எப்போதும் ....

அன்புடன்,
ஆர்.நாகப்பன்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நல்ல கவிதை, இன்று காலையே பதிவுகள் இதழில் படித்து மகிழ்ந்தேன்.

அன்புடன்,
ஜோதிபாரதி.

ரா.நாகப்பன் said...

நன்றி ஜோதி பாரதி,
வருவது நலம் அதை பெறுவதில் சுகம் ...
தொடர்வோம் நட்பாய் என்றும்.....

அன்புடன்,
ஆர்.நாகப்பன்.

neelam enbathu song