சிரமப்படும் அளவிற்கு
கசப்புக்காட்டாதபிரியம் பொத்தி
தரவேண்டியிருக்கிறது
ஒவ்வொருமுறையும்முத்தம் என்ற பெயரில்....
ச்ச் சீ.....என்று தள்ளும்
கரங்களில்
சூடு தணிந்த இதம்
இருட்டிலும் பிரதிப்பளிக்கும்...
ஒரு நிசி உப்புக்கரிப்புடன்
கொஞ்சம்கொஞ்சமாய் ஆவிப்பறக்க
ஊற்றி குடிக்கவேண்டியதாய்......
சாத்தியப்படாத இடத்தில்
சாத்தியப்படுத்திய அவனை
திட்ட முடியாமல்
மெதுவாய் ஊர்ந்து!
பின்புறம் ஒட்டிய
மணல் தட்டி எழுந்த இடம்
பிற்பாடு
பிணம் புதைத்த
மேடாகும்!
நெடுஞ்சாலைகளில்
கிரீச்சிட்டு விளக்கணைக்கும்
வண்டிகளை தொடந்து
மல்லிகை சிதறலுடன்
வியாபாரம் பேசும் .....
அடுத்த வண்டி
நிற்கும் வரை
குளிருக்கிடையில் சிறுநீராய்
ஞாபகப்படுத்திப் போகலாம்-
முதலிரவும் முதல் முத்தமும்!
1 comment:
புரிஞ்சிதா இல்லையானு எனக்கே தெரியல...நல்லாத்தான் இருக்கும் போலேருக்கு!
Post a Comment