ஒருவேளை நீ
வாசிக்காத ஒரு சந்தர்ப்பத்தில்யாரோ ஒருவரின் வாசிப்பில்
உயிர்ப்பித்திருக்கலாம்
இந்த கவிதை.....!
உனக்காகஎழுதியதை
பிறர் வாசிக்கிற அவஸ்தையில்
நெகிழ்ந்து
மூச்சு வாங்கும் வார்த்தைகளில்
நாணத்தால் சிவந்து போயிருக்காலம்
என் காதல்!
திரும்பிவந்து விட்ட
ஆயிரத்து எட்டாவது கடிதத்தோடு
இதுவும் ஒன்றாகிப்போனத்தில்
வருத்தம் இல்லைஎன்றாலும்
அதையே நான் வாசித்து வாசித்து
பசியாரிக்கொண்டிருக்கிற கொடுமையில்
கல்லெறிந்து போகிறது
உன்னை தொலைத்து நிற்கும்
என் தனிமை....
எந்த
முன்னெச்சரிக்கையும் இல்லாமல்
நீ இடப்போகிற
பின்னூட்டத்தில்தான் இருக்கிறது
இனிமேல் எழுதப்போகிற
எனக்கான உன் படைப்புகள்......
ஆரவாரமில்லாத
கடற்கரை மணல்வெளியில்
இட்டு சென்ற உன் கால்தடங்களை
எதேச்சையாய் அழித்த ஒருவன்
வருந்திக்கொண்டிருக்கிரான்
என்னைப்போல!
ஒருவேளை நீயும்
சில அதிகபடியான கணங்களுடன்
எழுதி வைத்திருக்கலாம்
உனக்கான காதலை
பிறருக்கான பதிவுகளில்!
4 comments:
//ஒருவேளை நீயும்
சில அதிகபடியான கணங்களுடன்
எழுதி வைத்திருக்கலாம்
உனக்கான காதலை
பிறருக்கான பதிவுகளில்!//
இருக்கலாம் இருக்கலாம்...அழகான கவிதை
அன்புடன் அருணா
அபாரம் சாரே!
//எந்த
முன்னெச்சரிக்கையும் இல்லாமல்
நீ இடப்போகிற
பின்னூட்டத்தில்தான் இருக்கிறது
இனிமேல் எழுதப்போகிற
எனக்கான உன் படைப்புகள்.....//
வரிகள் மனதை விட்டு அகல மறுக்கிறது!
கண்டிப்பாய் பின்னூட்டம் வர வாழ்த்துக்கள்!
நன்றி பரிசல்...
நன்றி அருணா.....
அன்புடன்,
ஆர்.நாகப்பன்
//எந்த
முன்னெச்சரிக்கையும் இல்லாமல்
நீ இடப்போகிற
பின்னூட்டத்தில்தான் இருக்கிறது//
:)))
கடைசி வரி அருமை...
Post a Comment