01-04-2018
ஞாயிறு
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 260
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
உடைந்திருக்கும் தாத்தாவின்
மூக்கு கண்ணாடியை போல
விரிசல் விட்டிருந்தது வானம் ....
உதிர்ந்த கொலுசின் மணிகளாக
விழ ஆரம்பித்தது நட்சத்திரங்களை சுமந்தபடி மேகம் ...
தொட்டிச்செடியில் விழுந்து
விதையாகும் அதன் முயற்சியில்
முளைக்க ஆரம்பித்தது நிலாக்கள் .....
சுவரில் ஆணியில் தொங்கும்
குடும்ப உறவுகளை வால் அறுந்த பல்லி ஒன்று
புணர்தலை மறந்து பார்த்து கொண்டிருந்தது...
மூடி திறக்கும் ஒற்றை கதவாக
காற்றில் அசைகிறது பாட்டியின் முந்தாணை ...
சிறு வெயில் பிடிக்க முன்னங்கால் தூக்கும்
கீர்த்தனாவீட்டு குட்டிப்பூனையை போல
அடிக்கடி காலை சுற்றி வருகிறது
ஊரும் ஊரை சுற்றி ஓடிய ஆறும் ...
மூக்கு கண்ணாடியை போல
விரிசல் விட்டிருந்தது வானம் ....
உதிர்ந்த கொலுசின் மணிகளாக
விழ ஆரம்பித்தது நட்சத்திரங்களை சுமந்தபடி மேகம் ...
தொட்டிச்செடியில் விழுந்து
விதையாகும் அதன் முயற்சியில்
முளைக்க ஆரம்பித்தது நிலாக்கள் .....
சுவரில் ஆணியில் தொங்கும்
குடும்ப உறவுகளை வால் அறுந்த பல்லி ஒன்று
புணர்தலை மறந்து பார்த்து கொண்டிருந்தது...
மூடி திறக்கும் ஒற்றை கதவாக
காற்றில் அசைகிறது பாட்டியின் முந்தாணை ...
சிறு வெயில் பிடிக்க முன்னங்கால் தூக்கும்
கீர்த்தனாவீட்டு குட்டிப்பூனையை போல
அடிக்கடி காலை சுற்றி வருகிறது
ஊரும் ஊரை சுற்றி ஓடிய ஆறும் ...
- நாகா
No comments:
Post a Comment