Tuesday, May 29, 2018

19-04-2018
வியாழன்
ஒற்றையடிப்பாதை : 272
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
முள் கீறிய காற்றின் அலைவரிசை
பரிசலாய் அசைத்தது அந்த வனத்தை ...
பனித்துளிகளாக கொட்டி சென்ற ரணங்கள்
சுமந்து கொண்டிருந்தது இலைகளை ...
அசையும் கிளையில் ஊஞ்சலாடும்
மேகத்தின் தாவணியில் முகம் துடைத்த
சிறுவெயிலில் குளிர் காய்ந்தது ஓடை ..
சிறகு முளைத்து சுற்றி அலைந்து
கருவேலம் முள்ளில் தொங்கியபடி
கவண் வீசும் திசை நோக்கி
பார்த்துக் கொண்டிருந்தது ஒரு வெள்ளை அணில் ..
அந்த வனத்தின் வரலாறு
தன்னை புரட்டிக்கொண்டிருந்த நேரம்
ஈட்டியால் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவனும்
தூண்டிலால் மான் பிடித்து கொண்டிருந்த ஒருவனும்
உள் நுழைந்து கொண்டிருந்தனர்..
தூண்டிலில் மீன் பிடிக்கும் சூட்சுமம்
தூண்டிலால் மான் பிடித்துக் கொண்டிருந்தவன்
சொல்லிக் கொண்டிருந்தான் ...
அந்த நதியில் நீராடிய மான்
நீந்திக் கொண்டிருந்த மீனிடம்
பேசிக்கொண்டிருந்ததை எழுத ஆரம்பிக்கிறது அந்த வனம் ..
- நாகா

No comments:

neelam enbathu song