Tuesday, May 29, 2018

05-03-2018
திங்கள்
ஒற்றையடிப்பாதை : 243
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
உடைந்த கண்ணாடி
சில்லுகளாய் பிம்பங்கள் ...
காற்றின் நிறம் பிரிக்கும்
பூவின் வாசனை ...
குரலில் நனைந்த இசை
தந்திகள் மறந்த கம்பிகள் ...
பறந்து போகிற வானம்
உதிர்த்து போகிறது நிலவை ....
முள்ளில் அமரும் நிழல்
வியர்வையில் நகரும் எறும்பு ...
முட்டி மோதி விழாமல்
கண்டம் தாண்டும் கனவு
சகலமும் சேகரிக்கும் நிமிடம்....
நட்டு வைத்து பதியன்போடும்
முறிந்த கிளையொன்றில்
துவைத்து காயப்போட்டிருக்கிறேன்
துளி துளியாய் நட்சத்திரங்களை
சொட்டுகிறது மேகம்....
-நாகா

No comments:

neelam enbathu song