Tuesday, May 29, 2018

04-04-2018
புதன்
ஒற்றையடிப்பாதை : 263
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
நதியை தூக்கி தோளில் போட்டு கொண்டு
கரையேறிக்கொண்டிருந்தான் சித்தன் ..
கரையெங்கும் திவலைகளாய் சிதறிய துளிகள்
ஆறுகளை தோற்றுவித்து கொண்டிருந்தது ..
மணல்வெளியெங்கும் ஆதிசேடனை
பரப்பிவிட்டு தூங்கி கொண்டிருந்த அதன் நித்திரை
சித்தனின் கால் பட்டு நெளிய ஆரம்பித்தது..
பிற்பாடு நாகரீக தொட்டிலில் புட்டிப்பாலுடன்
புரண்டு படுத்து அழ ஆரம்பிக்கும் குழந்தையானது ...
கிலுகிலுப்பை மறந்த தன் முகத்துவாரங்களில்
ஈரம் கசிய ஆரம்பித்திருக்கும் சித்தனை பார்த்து ..
இறக்கி விடும்படி எவ்வளவு கெஞ்சியம்
இரக்கமில்லாமல் நடக்கும் அவனை சபிக்க ஆரம்பித்தது நதி ...
ஒரு வழியாக சமுத்திரம் அருகில் நின்றது
அவன் நடை பயணம் …
அடம்பிடித்த நதியின் காது திருகிய சித்தனை
ஒன்றும் செய்யமுடியாமல் வலைக்குள்
பதுங்க தொடங்கியது நண்டொன்று...
திருவிழா கூட்டத்தில் தொலைய ஆரம்பித்தது நதி
பிஞ்சு விரல்களில் படிந்திருந்த மணல்வீட்டில்
நுரை பூக்களை போர்த்தி இருந்தது அந்த கடல்...
இப்போது நதியின் தாகத்தில்
அந்த சமுத்திரம் ஒற்றைத்துளியாகிக் கொண்டிருந்தது ...
சித்தன் வழக்கம் போல் நதி இருந்த
இடம் நோக்கி நடக்க ஆரம்பித்தான் ...
- நாகா

No comments:

neelam enbathu song