Tuesday, May 29, 2018

13-03-2018
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை : 249
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
உறைந்து போன புகைப்படத்தில்
உதிர்கிறது ஞாபக பீலி ...
கலாபத்தின் மழைக் கண்கள்
தோகை விரிக்கிறது ....
பனி துளியெங்கும் கொட்டிக்கிடக்கும்
ஆகாயத்தின் துண்டுகளில்
நடந்து போகும் ஒரு மத்தியான வெயிலை
நகலெடுக்கும் முயற்சியாக
அமைந்துவிடுகிறது யாவும் ...
முடிவிலியின் தொடர்பிழையாக
தொட்டுச்செல்லும் அனாமதேயத்தில்
தந்திக்கம்பி குருவிகளாகிறது வார்த்தைகள்...
சிறகு உலர்த்தும் அதன் நிழலில்
சாயங்கால மேகங்களை
கொத்திச்செல்லும் உங்கள் நேசத்தின் கண்களை
பொத்தி விளையாடுகிறது
நானும் நானுமான என் கவிதைகள் ..
- நாகா

No comments:

neelam enbathu song