Tuesday, May 29, 2018

18-03-2018
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 252
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
ஒரு நிழலை இன்னொரு நிழல்
முத்தமிட்டுக்கொண்டிருந்தது ..
உதிர்ந்த முத்தத்தின் சாயல்
ஒரு நீரோடையில் மிதந்து செல்லும்
செம்மர பூக்களை ஞாபகப்படுத்தியது ..
முத்தத்தில் நனைந்த ஓடையின் பாதையெங்கும்
மூச்சிரைக்க ஓடிவந்தது அந்த மரம்...
கலைந்த கேசத்தில் தஞ்சமடைந்தது
பறிக்க மறந்து உதிர்ந்த முத்த பூ ஒன்று ...
வேர் விசிறியால் கிளை நெற்றியில்
விசிறிப்போனது அந்த வனம் ...
தண்ணீரில் மூழ்கி எழுந்த பிம்பங்களில்
அடர்த்தியாய் விழுந்தது
வானவில்லின் வண்னம் ஒன்று ...
சாயம் குழைத்து முத்த ஓவியம் தீட்ட
ஆரம்பிக்கிறது சலசலத்து ஓடும்
அந்த நீரோடை முத்தங்களை
முந்தாணையில் முடிந்தபடி...
-நாகா

No comments:

neelam enbathu song