Tuesday, May 29, 2018

15-03-2018
வியாழன்
ஒற்றையடிப்பாதை : 251
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
அந்த வீதி முழுதும்
இரைந்து கிடந்தது பூக்கள் ...
ஒற்றை பூவாக மல்லாந்து கிடந்த
சாமந்தியில் அமர்ந்து போகிறது
மத்தியான வெயில் ...
வியர்வையும் கண்ணீரும் கலந்து
கடத்திக் கொண்டிருந்தது கால்களை ...
தெருவிளக்கின் சோகையான
வெளிச்சம் படர்ந்த ராவொன்றில்
படுத்து தூங்கிய நாயின்
வெதுவெதுப்பில் வீழ்ந்து கிடந்தது
ரோஜா பூவின் இதழ் ஒன்று ...
கால் ரேகையில் தேய்ந்திருந்த
அந்த வீதியின் திருப்பத்தில்
திரும்பி வர காத்திருந்தது
அதுவரை சேகரித்த சிரிப்பும் கும்மாளமும்...
- நாகா

No comments:

neelam enbathu song