Tuesday, May 29, 2018

10-04-2018
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை : 267
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
அச்சாணி இல்லாத வண்டியிலிருந்து
கழன்று ஓடும் சக்கரமாகிறது மனசு ...
தார்குச்சியோ கடிவாளமோ
தேவைப்படுவதில்லை என்றாலும்
ஒற்றையயடி பாதையிலும்
ஓடத்தான் செய்கிறது ஒய்யாரமாக ...
பஞ்சுமிட்டாய் குருவி ரொட்டிக்காக
அடம் பிடித்த நேற்றைய மனசுதான்
சந்தைக்குள் புகுந்த மதம்பிடித்த
யானையாகிறது இப்போது ...
கூட்டத்தில் தொலைந்து
யாருமில்லாத இடத்தில் கண்டடைவதில்
பரவசப்படும் அதன் தனிமை
சிந்த ஆரம்பிக்கிறது கண்ணீர் துளிகளை ...
பொம்மைகளை கட்டிக்கொண்டு
போர்வைக்குள் தூங்கும் மனதின்
இரவுகளில் வந்துதான் போகின்றன பேய்க்கனவுகள் ...
பிடுங்கி அழவைத்து சமாதானப்படுத்தும்
ஒரு மனத்திடமிருந்து பத்திரப்படுத்த
வேண்டியிருக்கிறது இன்னொரு மனதை ...
- நாகா

No comments:

neelam enbathu song