Tuesday, May 29, 2018

22-03-2018
வியாழன்
ஒற்றையடிப்பாதை : 255
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
சுழல ஆரம்பிக்கிறது சக்கரம்
சிக்கிக்கொள்கிறது அடிக்கடி ஒற்றையடி பாதையில் ..
ஆற்றின் அலையில் மிதக்கும் அச்சாணியில்
பனைமரத்தின் நிழல் ஒன்று
கரையொதுங்குகிறது மெதுவாக ...
ரவிக்கை கிழித்த முள்ளில்
துளிர்த்திருக்கும் ரத்த துளியில்
தீட்டி போகிறது வறுமை ஓவியம் ...
இரவு பயணங்களில் தலையசைத்து வரும்
அரிக்கேன் விளக்கின் சிம்னியில்
படியும் இருட்டாகிறது அதன் தனிமை ...
சுவர் கோழிகளின் சேர்ந்திசையில்
அபஸ்வரமாகிறது மாட்டின் கழுத்தில் அசையும் மணி ...
கடையாணி மையில் வரைந்த மீசை
ஈரம் உலர்வதற்குள் பூக்க ஆரம்பிக்கறது கூந்தல்...
இருட்டை கூட்டிச்செல்லும் அத்துவானத்தில்
பாதியில் கரையும் குரலாக
இந்த கவிதை இருந்துவிடுமோ
தொலைதூர வெளிச்சத்தில்
வீட்டில் பூச்சியாகிறது அடிக்கடி ...
- நாகா

No comments:

neelam enbathu song