Tuesday, May 29, 2018

02-04-2018
திங்கள்
ஒற்றையடிப்பாதை : 261
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
கண்ணாடி ஜன்னலை வெகுநேரமாய்
கொத்திக் கொண்டிருந்தது
பெயர் தெரியாத அந்த பறவை...
சிறகில் பதுங்கியிருந்த வானத்தை
இறக்கி வைத்து தட்ட தொடங்கியது வெகுநேரமாக ...
ஓசைகேட்டும் திறக்காத என் செயலில்
தப்பிதங்களை கற்பிக்கத்தெரியாத
அதன் அறியாமை என் இரவுகளை
ஆழமாய் கொத்த ஆரம்பித்தது...
என் கம்பளிகளில் நனைந்திருந்தது
பனியில் முழுதாய் தொலைந்திருந்த அதன் மேனி ...
என் பெயர் தெரிந்திருந்தால்
ஒருவேளை சத்தமிட்டு எழுப்பி இருக்கலாம் ....
என் உறக்கம் அதன்
மொழிதெரியாத பின்னணியில் ...
சத்தமாய் என்னை பெயர் சொல்லி
கூப்பிட்டுக்கொண்டே இருந்தது அதன் முனகல் ...
தாழ்திறக்க சம்மதிக்காத அந்த ராத்திரி
கிளை முறிந்த மரமொன்றை
காலையில் திறந்து பார்க்கும் போது
கண்டு அதிர்ந்து போகலாம் பறவையின் கூட்டுக்குள்
உதிர்ந்து கிடக்கும் இறகின் மிச்சம் கண்டு ...
- நாகா

No comments:

neelam enbathu song