11-04-2018
புதன்
புதன்
ஒற்றையடிப்பாதை : 268
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
வெயில் உறங்கி விழிக்கிறது
நதியின் மேனியில் வியர்வை ...
நிழல் கிழித்து பகல் தைக்கும்
நெடுஞ்சாலையில் ஓடி வருகிறது கோடை ..
மூச்சிரைத்து தளும்பும் ஓட்டம்
குடுவைக்குள் மேகம் தேடும் வானமாகிறது காகம் ...
சிதறிய மின்மினிகளை கொத்திச்செல்கிறது
தூண்டில் முள்ளில் சிக்கிக்கொள்ளும்
தூண்டில்காரனாக ஆகி போகிறது முரண் ..
ஒரு சிறு கூழாங்கல்லில்
ஒளிந்திருக்கலாம் கடல் குறித்தான காதல்...
நிமிர்த்து வைத்திருக்கும் பரிசலில்
கூடுகட்டியிருந்தது ஆகாய தாமரைகள் ...
கணையாழிகளின் புருவங்களை
தொட்டுச்செல்கிறது ஒற்றை துளியில்
சிறகு விரிக்கும் நதி...
நதியின் மேனியில் வியர்வை ...
நிழல் கிழித்து பகல் தைக்கும்
நெடுஞ்சாலையில் ஓடி வருகிறது கோடை ..
மூச்சிரைத்து தளும்பும் ஓட்டம்
குடுவைக்குள் மேகம் தேடும் வானமாகிறது காகம் ...
சிதறிய மின்மினிகளை கொத்திச்செல்கிறது
தூண்டில் முள்ளில் சிக்கிக்கொள்ளும்
தூண்டில்காரனாக ஆகி போகிறது முரண் ..
ஒரு சிறு கூழாங்கல்லில்
ஒளிந்திருக்கலாம் கடல் குறித்தான காதல்...
நிமிர்த்து வைத்திருக்கும் பரிசலில்
கூடுகட்டியிருந்தது ஆகாய தாமரைகள் ...
கணையாழிகளின் புருவங்களை
தொட்டுச்செல்கிறது ஒற்றை துளியில்
சிறகு விரிக்கும் நதி...
- நாகா
No comments:
Post a Comment