18-04-2018
புதன்
புதன்
ஒற்றையடிப்பாதை : 271
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
தேவதை கனவுகளோடு
அடிக்கடி தொலைந்து போகிறேன் நான் ...
மந்திரம் மறந்து விழிக்கும் தருணங்களுக்காக
காத்திருக்கிறாள் சூனியக்காரக்கிழவி...
ராத்திரி வெயில் நந்தவனங்களை நனைக்க
நிலா பூக்க தொடங்கியிருந்தது என் நந்தவனத்தில்..
எங்கிருந்தோ பட்டாம்பூச்சியாக
பறந்து வந்து என் போர்வைக்குள்
படுத்துக்கொண்டது அந்த ஆகாயம் ...
மந்திரக்கோல் முழுதும் நட்சத்திரங்கள்
அக்கறை கோர்க்கிறேன் உதிர்ந்து விடாமல்இருக்க ...
மிதக்கும் வெள்ளை தேவதையும்
நெருப்பில் கால் பதித்து நடக்கும்
கருப்பு உடை சூனியக்கார கிழவியும்
குளித்து எழுந்து செல்லும் நதியில் இருந்து
பறக்க ஆரம்பிக்கின்றன பறவைகள் ...
ஏதோ ஒரு பறவை என் பெயரை சத்தமிட்டு சொல்ல
முதலில் திரும்பியது தேவதை என்றாலும்
புன்னகைத்தது என்னவோ சூனியக்கார கிழவிதான் ...
ஒரு புன்னகையின் பின்னே
ஒளிந்து கொண்டிருக்கிறது யாவும் ...
தேவதைகளால் காதலிக்கப்படுபவர்களைவிட
சூனியக்காரக்கிழவிகளால்
ஆசீர்வதிக்கப்படுபவர்கள் ஏராளம் ...
அடிக்கடி தொலைந்து போகிறேன் நான் ...
மந்திரம் மறந்து விழிக்கும் தருணங்களுக்காக
காத்திருக்கிறாள் சூனியக்காரக்கிழவி...
ராத்திரி வெயில் நந்தவனங்களை நனைக்க
நிலா பூக்க தொடங்கியிருந்தது என் நந்தவனத்தில்..
எங்கிருந்தோ பட்டாம்பூச்சியாக
பறந்து வந்து என் போர்வைக்குள்
படுத்துக்கொண்டது அந்த ஆகாயம் ...
மந்திரக்கோல் முழுதும் நட்சத்திரங்கள்
அக்கறை கோர்க்கிறேன் உதிர்ந்து விடாமல்இருக்க ...
மிதக்கும் வெள்ளை தேவதையும்
நெருப்பில் கால் பதித்து நடக்கும்
கருப்பு உடை சூனியக்கார கிழவியும்
குளித்து எழுந்து செல்லும் நதியில் இருந்து
பறக்க ஆரம்பிக்கின்றன பறவைகள் ...
ஏதோ ஒரு பறவை என் பெயரை சத்தமிட்டு சொல்ல
முதலில் திரும்பியது தேவதை என்றாலும்
புன்னகைத்தது என்னவோ சூனியக்கார கிழவிதான் ...
ஒரு புன்னகையின் பின்னே
ஒளிந்து கொண்டிருக்கிறது யாவும் ...
தேவதைகளால் காதலிக்கப்படுபவர்களைவிட
சூனியக்காரக்கிழவிகளால்
ஆசீர்வதிக்கப்படுபவர்கள் ஏராளம் ...
- நாகா
No comments:
Post a Comment