Tuesday, May 29, 2018

25-03-2018
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 256
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
ஒரு உண்டிவில்லிலிருந்து
எறியப்பட்ட சரளைக்கல்லாக இந்த கவிதை ...
காயோ கனியோ அணிலோ கிளியோ
ஏதோ ஒன்று விழுவது சாத்தியமில்லை ...
சமையலறை கண்ணாடி உடைத்து
உள் புகுந்த அதன் வேகத்தில்
அடிக்கடி கனம் கூடிக்கொண்டே இருந்தது...
மாமர வாசம் வீசும் அதன் மேனியெங்கும்
வியர்வை நிறம்பூசி இருந்தது....
கண்மையில் ஒளிந்து கொண்ட வார்த்தை இமைகளில்
வாடாமல்லியின் கனவு துளிர்க்க ஆரம்பித்தது ....
சுருட்டி எறிந்த ஆகாயத்தை கசங்கிய காகிதத்தில் இருந்து
வெளிப்படுத்தும் அதன் முயற்சியில்
உதிர தொடங்கியது விண்மீன்கள் ...
நதியில் நெளிந்த மீன்களின் தடயம்
காய்ந்த மணல்வெளி எங்கும் தகித்தது..
ஒரு கோப்பை தேநீரும் கொஞ்சம் கவிதையுமாக
கரையும் சந்தர்ப்பங்களில்
கசியும் இசையாகிறது மௌனம் ...
- நாகா

No comments:

neelam enbathu song