Tuesday, May 29, 2018

14-03-2018
புதன்
ஒற்றையடிப்பாதை : 250
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
முன்பொரு காலத்தில் அந்த நிறம்
தன்னிறமாக இருந்ததை உணர்ந்த போது
புசிப்பதை நிறுத்தியிருந்தது அந்த கிளி...
வெளிர் பச்சையில் கண் சிமிட்டிய கோவைப்பழம்
பிறிதொரு நாளில் தன் அலகை
ஞாபகப்படுத்தியபோது
லேசாக குலுங்கியது அதன் கூடு ...
ஆருடம் சொல்லிய கிளிஜோசியக்காரனின்
நெல்மணிகளை தேட வைத்தது அதன் பசி...
தன் மொழி மறந்த உரிந்த நாக்கில்
ஆதி மொழியின் தழும்பு உறுத்தியது அடிக்கடி ...
தோளில் அமர்ந்திருக்கும் தன் மூதாதையின்
நேற்றைய திமிர் தொலைந்திருந்தது அதனிடம் ..
கிளி என்று யாராவது அழைக்க மாட்டார்களா
ஏக்கத்தில் அமர்ந்திருந்த அதனருகில்
எங்கிருந்தோ பறந்து வந்தது ஒரு காகம் ...
முதல் முறையாக தான் கிளியாக இருந்த கதையை
சொல்ல ஆரம்பித்தது அந்த காகம் ...
நீரோடையில் தெரிந்த தன் நிறம் பார்த்து
சிரிக்க ஆரம்பித்தது அந்த கிளி....
யாரோ சொல்லி கொண்டனர்
அது கிளியும் அல்ல காகமும் அல்ல பறவை என்று ...
- நாகா

No comments:

neelam enbathu song