Tuesday, May 29, 2018

21-03-2018
புதன்
ஒற்றையடிப்பாதை : 254
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
மொட்டை மாடி தொட்டி செடியை போல
ஆகாயம் பார்த்து வளர ஆரம்பிக்கிறேன் ...
கம்பிகளுக்கு வெளியே
தலைநீட்டி வெயில் ரசிக்கும்
அதன் வியர்வையில் அமர்ந்து போகும்
நேற்று பெய்த மழையின் ஒற்றை துளியாய் அதன் இருப்பு....
சாவி துவாரம் வழியே உள் நுழைந்து கொண்டிருக்கும்
சிறு எறும்பை போல அதன் பயணம் ...
நூல் அறுந்த காற்றாடியின் அசைவை
இமைக்காமல் பார்க்கும்
உடைந்த கண்ணாடி ஜன்னல் வழியே
வழியும் பச்சை கொடியின்
கசியும் இசையாகிறது அதன் இயக்கம் ...
மருத மண்ணில் முளைக்க ஆரம்பித்து
முல்லைக்கொடியில் நெய்தல் பூக்களை
கொய்ய ஆரம்பிக்கும் காற்றாகிறது அதன் விரல்கள்...
வருடிப்போகும் அன்பின் தரிசனத்தில்
தலையசைக்கிறது அதன் நிழல் ..
அந்த மொட்டைமாடியெங்கும் வியாபிக்கிறது
நட்சத்திரங்களுடன் அடிக்கடி
உரையாடிக்கொள்ளும் அதன் சந்திப்புகள்...
யாருமற்ற யாமத்தில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்
ஒரு தொட்டி செடியின் வனம் குறித்தான கனவை ...
- நாகா

No comments:

neelam enbathu song