Tuesday, May 29, 2018

29-03-2018
வியாழன்
ஒற்றையடிப்பாதை : 259
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
என் விரல்களில் மோதிரங்களாக கிடக்கும்
அவள் விரல்களை விடுவிக்க முடியாமல்
உள்ளங்கை ரேகையாகிறது என் அத்துமீறல் ....
காமக்கிழத்தியின் நரைத்த கூந்தலில்
உதிரும் பூவிலும் முத்தத்தின் நிறம் ...
உடல் சுருக்கங்களில் தங்கி செல்லும்
களத்துமேடாகும் நேற்றைய காதல் ....
ஆதிமரத்தின் தடயங்களை சுமக்கும்
மரங் கொத்தியை போல சிறகு விரிக்கிறது காமம் ...
யாரோ கட்டிய ஊஞ்சலை அசைத்து போகும் காற்றில்
மிதக்க ஆரம்பிக்கறது இணைசேர தொடங்கும் தட்டான்..
உதடுகளை உதறியெறிந்து நீரில் கரையும்
உடலெங்கும் வழுக்கி ஓடுகிறது அணைப்பின் கதகதப்பு...
ஒரு வனம் எரிக்கும் மூச்சுக்காற்றின் உஷ்ணம்
என்னை பூக்க வைக்கிறது அடிக்கடி ...
- நாகா

No comments:

neelam enbathu song