08-04-2018
ஞாயிறு
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 265
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
பிஞ்சு விரல்களால் காற்றை துழாவி மேகம் பிழிகிறாள்
பறக்க தொடங்குகிறது பறவைகள்...
சுண்டுவிரல் பிடிக்கும் குட்டி நதியாகிறாள்
ஆகாயமெங்கும் முளைக்க ஆரம்பிக்கிறது சிறகுகள்...
வண்ண தூவல்களால் முகமெங்கும்
கோடுகள் தீட்டி குதூகலிக்கிறாள்
சிலந்தியாய் சிக்கி கொள்கிறது மகிழ்ச்சி ...
செம்பருத்திப்பூவின் பனிக்கால பொழுதுகளை
உள்ளங்கைக்குள் பொத்தி வைக்கிறாள்
ஆயுள் ரேகையின் ஆயுள் கூடுகிறது ...
கண்ணாடி தொட்டிக்குள் நீந்தும் மீனாக நானும்
நிரம்பிய தண்ணீராக அவளும்
மாறி மாறி கூடுவிட்டு கூடு பாய்கிறோம் ...
அவளை புஜ்ஜி என்கிறேன் நான்
என்னை புள்ளி என்கிறாள் அவள்
எங்கள் மொழிகளின் கிளையில் வந்தமர்கிறது கனவு ..
ஒரு அப்பாவிற்கும் மகளுக்குமான
உரையாடல்களை நீங்கள் கேட்டிருந்தால்
உங்கள் தோட்டங்களில் விண்மீன்கள்
பூக்கத்தொடங்கலாம் அப்போதும் பூப்பறிக்க
ஒரு மகளும் ஒரு தந்தையும் தான் வந்தாக வேண்டும்
கையில் பட்டாம் பூச்சிகளை ஏந்தியபடி ...

- நாகா
No comments:
Post a Comment