Tuesday, May 29, 2018

26-03-2018
திங்கள்
ஒற்றையடிப்பாதை : 257
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
அது ஒரு போர்வை காலம்
எங்களை உதறி தன்னை
போர்த்திக்கொண்டது அந்த இரவு ...
மெதுவாகத்தான் தொடங்கினோம்
வன்முறையாகுமென்று அப்போது தெரியாது ...
உதறி மடித்து வைக்கும் போது தான் கவனித்தோம்
உடைகளின் அவசியமற்ற அந்த இரவை ...
உடைகளை உலர வைத்து
உடல்களை நனைத்திருந்தது பகலின் தொடரி...
முடிவிலியாய் முயங்கிய மருதாணி முத்தத்தில்
சிவக்க ஆரம்பித்தது வெட்கத்தின் கன்னம் ..
குளிர் கோப்பையில் ஆவிப்பறக்க
மிதந்த நிலவின் தழும்பலில்
சிதற தொடங்கிய விண்மீன்களை
கூட்டி பெருக்க வேண்டிய மிக பெரிய வேலை எங்களுக்கு ...
எழுந்ததும் முதலில் நகம் வெட்ட வேண்டும்
கல்வெட்டுகளை வாசித்த உதடுகளில்
தட்டுப்பட மறுக்கிறது நகக்குறியீட்டில்
பதுங்கி நிற்கும் ஒரு பூனைக் குட்டியான தேகம் ...
-நாகா

No comments:

neelam enbathu song