Tuesday, May 29, 2018

03-04-2018
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை : 262
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
கிறுக்கல்களால் உருவானது எங்கள் சுவர்
எங்களை சிறைப்படுத்தியிருந்தது கோடுகள்
பச்சை நிறத்தில் இருந்ததை அம்மா கோடு என்றும்
சிவப்பு நிறத்தில் இருந்ததை அப்பா கோடு என்றும்
சொல்லிக் கொண்ட மகளை கோடுகள் விழுங்க பார்த்தது...
வளைந்து நெளிந்து நெடுஞ்சாலையில் இருந்து
பிரிந்து செல்லும் ஒற்றையடி பாதையில்
வழுக்கி ஓடிக் கொண்டிருந்தது எங்கள் பயணங்கள்...
முட்டைவடிவங்களில் மரங்களும்
செவ்வகங்களில் நட்சத்திரங்களும்
அடிக்கடி கனசதுரத்தில் சந்தோஷங்களும்
எங்களை கணக்கிட்டுக் கொண்டிருந்தது ..
நீல கோட்டின் வழியே ஊர்ந்து கொண்டிருந்த
எறும்பின் உடம்பில் புகுந்து கொண்டது
எங்கள் வீட்டு மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தூறல் ....
உடைந்து விழாத வரைக்கும் கோடுகளின் பிடிப்பில்
தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு சிலந்தியின்
பசிநேரத்து உணவாக பறக்கும் ஈ ஒன்றை
வெறித்து பார்த்து கொண்டிருக்கும்
பல்லியானது எங்கள் பகல்...
போதும் நீங்கள் புரிந்து கொள்வதற்குள்
முடித்துவிட வேண்டும் இந்த கவிதையை
- நாகா

No comments:

neelam enbathu song