12-03-2018
திங்கள்
திங்கள்
ஒற்றையடிப்பாதை : 248
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
ஆதி காதலை கொட்டிச்செல்லும்
மூர்க்கமாக அவள் காதல் திரிகிறது எனக்குள் ...
ஆழிப்பேரலை கூட்டி செல்லும்
அதிரடி நேசமாய் சூதாடி சித்தனாகிறது காதல்...
படுக்கையெங்கும் தேடி அலையும்
அகழ்வாராய்ச்சியாளனின் நிலையில் நானும்
பாறைக்குள்ளிருந்து கண்விழிக்கும்
சிற்பத்தின் காலாதீத நிலையில் அவளும்
மாறி மாறி புதைந்து கொள்கிறோம் ...
மரணத்தின் உச்ச போதை ஒவ்வொரு இரவிலும்
தீராத கோப்பையில் ததும்பி வழிகிறது
ஒரு களிரிடம் சிக்கிக்கொண்ட பிடியை போல ...
இதழ்களை பருகி உடல்களில் ஆவியாகும்
காமத்தின் நிழலில் பரமபதமாய்
ஏணிகளில் எறியும் சர்பங்களின் இறங்கியும்
சுழலும் சோழிகளில் தாயம் தேட வைக்கிறது காதல் ...
மந்தாரை இலை தலைமூடும்
ஒரு மத்தியான மா மழையில்
பூக்க தொடங்குகிறது காமக் காளான் உடலெங்கும் ...

- நாகா
No comments:
Post a Comment