Tuesday, May 29, 2018

05-04-2018
வியாழன்
ஒற்றையடிப்பாதை : 264
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
வண்டி சக்கரத்தில் சிக்கிக்கொண்டது அவளின் தாவணி
அச்சாணி முனையில் சுழல ஆரம்பிக்கறது மனசு...
சுக்களாய் கிழித்து எறிந்த அந்த புன்னகை
பட்டாம்பூச்சிகளை பறக்க விடுகிறது திசைகளில்...
விழியீர்ப்பு விசையில் நியூட்டன்களை உருவாக்கும்
கடிபட்ட ஆப்பிளில் பதிந்திருந்தது அவளின் கைரேகை ..
அகல் விளக்கில் ஒளிந்துகொண்ட இருட்டை துடைத்து
விழிகளில் பூசிக்கொள்வாள் மையாக அடிக்கடி...
பார்வையில் தளும்பும் பரவசம் அசைத்துப்பார்க்கிறது
ஆணிவேருடன் குடைசாய்ந்தன ஆலமரங்கள்...
உடைகுறைத்த அவளின் உடலெங்கும்
மொய்க்க ஆரம்பித்தன கண்கள்...
தூண்டிலில் சிக்கி கரையேறி
பின்தொடர ஆரம்பித்தது குளங்கள்...
கொலுசுரசிய கால் தொட்டு வெயிலுக்குள்
படுத்துக் கொண்டது வீதி...
முடிவில் கழுத்தை முத்தமிட்ட தாம்புக்கயிறில்
ஊர்ந்துகொண்டிருந்தது ஆண் எறும்பு ஒன்று
சிலுக்கு - பெயரல்ல பெயருக்குள் இருக்கும் மனுஷி ...
- நாகா

No comments:

neelam enbathu song