Tuesday, May 29, 2018

08-03-2018
வியாழன்
ஒற்றையடிப்பாதை : 246
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
அம்மாவின் கிழிந்த முந்தாணை
நெற்றி துடைத்துப்போன நேரத்தில்
வியர்க்க ஆரம்பிக்கிறது மனதில் ...
அக்காவின் கிழிந்த தாவணியில்
வந்து தான் போகிறது
நூலாம்படையில் பல்லிளிக்கும்
அப்பாவின் ஓட்டை சைக்கிள் ...
மரப்பாச்சி தொலைத்த தங்கை
பறித்துக் கொண்டிருக்கிறாள் பீர்க்கம்பூவை ...
வாசல் கோலம் மிதித்து போகும்
பூக்கார கிழவியின் கையில்
முழம் போடுகிறது தாத்தாவின் ஞாபகம் ...
சித்தியோ அத்தையோ எதிர்வீட்டு பெண்ணோ
நிலைப்படியில் மோதிக்கொள்வதேயில்லை ...
தாழப்பறக்கும் சில
பாவாடை சட்டை தேவதைகளும்
உள்ளங்கை வெப்பம் தேடும்
ரெட்டைஜடை குட்டிசாத்தான்களுமாய்
நிரம்புகிறது யாதுமாகும் வாழ்க்கை ..
- நாகா

No comments:

neelam enbathu song