Tuesday, May 29, 2018

23-04-2018
திங்கள்
ஒற்றையடிப்பாதை : 274
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
தொட்டி நிறைய கனவுகளை
புதைத்து வைத்திருந்த ஒரு ராத்திரி ...
வியர்வையில் நனைந்திருந்த நிலவை துடைத்து
செம்பருத்தி பூவின் நிழலுக்குக்கீழே
படுக்க வைத்திருந்தேன் தலையசைத்தது காற்று ...
அநேகமாக நாளையோ நாளை மறுநாளோ
தங்க காசுகள் காய்க்க தொடங்கலாம் அந்த தொட்டி ...
புளிய மரங்களை உலுக்குவது போல்
பறித்துவிடமுடியாது சுலபமாக...
ஆட்டுக்கு தழை பறிக்கும் தொரட்டி கம்பினை
தேட ஆரம்பித்தது கண்கள்...
கை நீட்டி காற்றில் துழாவும் தருணங்களில்
உரசி தட்டுப்படலாம் கிளைகள்தங்க முலாம் பூசியப்படி ...
உதிரும் பூக்களின் நிறத்தில்
கண்சிமிட்டி மறைகிறது வேர்களின் வண்ணம் ..
ஒரு நீண்ட பயணத்தின் முடிவிலியில்
கலயம் நிரம்ப தொடங்கியது தங்க நினைவுகள் ...
நீண்ட அலகுகளில் கொத்தி கொள்ள சாளரம் திறக்கும்
பறவைகளுக்கு சொல்லத்தான் வேண்டும்
தங்கம் சாப்பிட்டால் பசியடங்காது என்று ....
- நாகா

No comments:

neelam enbathu song