Tuesday, May 29, 2018

19-03-2018
திங்கள்
ஒற்றையடிப்பாதை : 253
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
முத்தங்களை ஏந்திக்கொண்டு
ஓடிக் கொண்டிருக்கிறது அந்த ஓடை ..
ஒரு குழந்தையை சுமந்து செல்லும்
பிரியமும் அதீத காதலுமான அதன்
விசுவாசத்தில் மிதந்து போகிறது வானம் ...
கரையில் இருந்து யாரோ முத்தங்களை
பொருக்கி கொண்டிருந்தனர் சுவாரஷ்யமாக ...
கூடை நிறைய முத்தங்களுடன்
வீடு திரும்பி கொண்டிருந்தவர்களிடமிருந்து
உதிர்ந்த முத்தங்களை
கொத்திக்கொண்டிருந்தது பறவைகள்...
கூடுகளை முத்த குச்சிகளால்
கட்ட ஆரம்பித்தது சிறுதூறலாக இறங்கிய மேகம்...
முத்தங்கள் உரசி தீப்பற்றிகொள்வதற்குள்
கொத்திக்கொண்டு பறக்க ஆரம்பித்த
மின்மினியின் சிறகில் ஒளிந்துகொண்ட
சிறுமுத்தத்தின் வெளிச்சத்தில்
இரைதேடத் தொடங்கியது ...
முத்தம் தின்று முத்தத்தால்
ஜீவிதமாகிறது இந்த கவிதை .....
- நாகா

No automatic alt text available.

No comments:

neelam enbathu song