Tuesday, May 29, 2018

28-03-2018
புதன்
ஒற்றையடிப்பாதை : 258
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
தரை முழுக்க சிதறி கிடந்த கால்கள்
பயணத்திருக்காணியில் தொலைந்த கொலுசாக
ஏதோ சொல்ல வாய்திறக்கிறது ..
காதுகளை துடைத்து சத்தம் நிரப்ப தயாராகிறேன்
சுவர்களில் பதிந்த கண்கள்
ஏளனமாக சிரிக்க ஆரம்பித்தது...
காற்றை துழாவி இருட்டை ஏற்றி வைத்தபோது
உருகும் மெழுகில் ஒளியத் தொடங்கியது வெளிச்சம் ...
சிலந்தியாகும் அதன் விரல்களில்
ஆதி தொங்கலாகிறது அந்த அறை ...
எங்கோ தொலை தூரத்தில் இருந்து
காதுகளை தொடுகிறது வீரியம் இழந்த இருமல் ...
தோட்டத்து பூவின் உதிரும் மென் சத்தம்
அடித்தளம் அசைத்து போவதை
ஆணியில் தொங்கியப்படி உணரும் சுவரில்
ஆடிக்கொண்டிருக்கிறது பலவீனமான பல்லி ஒன்று ...
கலவியின் முழுமை அறிவதற்குள் பறந்துவிடும்
பட்டாம்பூச்சியாகிறது இந்த கவிதை ...
- நாகா

No comments:

neelam enbathu song