Tuesday, May 29, 2018

இதை கவிதை என்றும் சொல்லிக் கொள்ளலாம் ....
என்னை போலவே
என் எழுத்துக்களும்
நேராக சில இடது, வலதுமாக சில...
வளைந்து நெளிந்து அதன் நிழல் விழுகிற
இடங்களில் எல்லாம்
பூக்கள் பூப்பதாக சொல்லிக் கொள்பவர்களுக்கு
தெரிவதில்லை
நேற்றைக்கு முன் தின மழையில்
ஒவ்வொரு வீட்டு கதவையும்
அது தட்டி சென்றது என்று...
எனக்கும் என் எழுத்துக்குமான
சமரசத்தில்
சமாதானமடையாது ஒரு உதிர்ந்த இலையில்
ஊர்ந்து கொண்டிருக்கலாம் ஒரு கறுத்த எறும்பு...
எபோதாவது
வண்டி சக்கரங்களின்
டயர்களுக்கு கீழ் சிக்கிக்கொண்டு
மீண்ட சந்தோசத்தில்.....
ஒரு மெல்லிய தீயின்
சுவாலையில்
உருவாகும் காற்றின் ஓவியத்தில்
கரைந்திருக்கும் வண்ணத்தின்
அதிகபட்ச நேசம்
காதலை தவிர வேறென்ன இருக்க முடியும்....

No comments:

neelam enbathu song