Tuesday, May 29, 2018

06-03-2018
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை : 244
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
அந்த அதிகாலையில்
உறக்கம் கிழித்து போகிறது
ஒற்றை ரயிலாகும் அவள் ஞாபகம் ...
லாந்தர் விளக்கை தொங்கவிட்டபடி
அசைந்து போகும் மாட்டு வண்டியில்
குளிர் சுமந்து வரும் பொழுதாகிறது யாவும் ...
ஆற்றை துளிகளாக்கி
கரைகளில் விதைத்து கொண்டிருக்கும்
பறவை குளியலில்
நனைந்து கிடக்கும் சொற்களாக ஊடல்...
ஓணான்செடியில் ஊறும் கருப்பு எறும்பின்
மேனியெங்கும் வீசும் பால்வாசம் போல்
தவிற்பதற்கில்லை நேற்றின் வாசலில்
கோலமிட்ட பொழுதுகளை ...
கால் உரசிப்போகும் பாவாடை முனையில்
சிக்கி கொண்ட கொலுசின் அவஸ்தை
மனதின் தாழ்வாரங்களில்
கொட்டிச்செல்கின்றன வண்ணங்களை
யாரும் அறியாத பொழுதில் ....
-நாகா

No comments:

neelam enbathu song