Tuesday, May 29, 2018

29-04-2018
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 277
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
இசையின் பரல்களை
சிப்பி பொறுக்கும் மழலையாக
சேகரிக்கிறேன் நழுவுகிறது காடு ...
ஒரு உடைந்த யாழும்
ஒரு உடையாத ராகமும்
முத்தமிட்டுக் கொண்டிருந்தது
அந்த அதிகாலை வேளையில் ....
முத்தெடுக்கும் அஜாக்கிரதையில்
குப்புற கவிழ்ந்த பரிசலில் இருந்து
பறக்க தொடங்கியது வானம்பாடிகள் ...
தண்ணீரில் மிதக்கும் உதிர்ந்த இறகில்
அலையடிக்கும் கடலின் நுரையில்
அமர்ந்து போகிறது இசையின் குமிழி ஒன்று ..
விடைபெறுதலை முன் வைக்கும்
ஒரு அடர்மழைக்காலத்தின் கடைசி தூறலில்
கண்விழிக்கிறது இந்த கவிதை ....
ஈர நிலத்தின் வெதுவெதுப்பில்
காற்றுவீச ஆரம்பிக்கறது இரவின் கதவை
லேசாக திறந்து கொண்டு ...
- நாகா

No comments:

neelam enbathu song