Tuesday, May 29, 2018

26-04-2018
வியாழன்
ஒற்றையடிப்பாதை : 276
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
ஒரு வெள்ளைக்காகிதமும்
சில கருப்பு கோடுகளுமாக
என்னை வரைந்து போனால் அந்த தேவதை ..
பிஞ்சுவிரல்களில் அப்பிக்கொண்ட
நிறக்கலவையின் மொழி
என்னை நனைக்க ஆரம்பித்தது மெதுவாக ..
நிறக் குழப்பத்தில் என் சுயநிறத் தேடலில்
தடுமாறியது என் காமம் ...
இசையின் நிறம் பிரிக்கும்
ஒரு வானம்பாடியாக சிறகு விரித்தது என் பிரியம் ..
அதீத கரிசனத்தை தேநீர் கோப்பையில்
கொட்டி கொடுக்கும் அவள் நேசத்தின் நிறம்
உறைய ஆரம்பித்தது முதல் முறையாக ...
நிறங்களால் ஆனதை நிறங்களின் பூதக்கண்ணாடியால்
பார்க்க ஆரம்பிக்கிறேன் நான் ...
மைக்குப்பியை தவற விட்ட குழந்தையாக
உள்ளங்கை பூசி அலைகிறது என் பால்யம் ....
வண்ணங்களான என்னை பிடிக்க
பறந்தது அந்த வண்ணத்து பூச்சி ..
நிறமில்லாதவனை நிறைந்திருந்தது
சாயம் போகாத அடங்க மறுத்த காதல்...
சண்டித்தனத்தின் நிறம் அவளாகவும்
சமாதானத்தின் நிறமாக நானும்
மாறிக்கொண்டிருக்கிறோம்
நிறங்களை பரஸ்பரம் பூசிக்கொண்டு ....
- நாகா

No comments:

neelam enbathu song