Tuesday, May 29, 2018

09-04-2018
திங்கள்
ஒற்றையடிப்பாதை : 266
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
ஒரு ஆண் வெயில் ஒரு பெண் வெயில்
உரசி கொண்டது நனைந்தது பூமி ...
ஒரு ஆண் மழை ஒரு பெண் மழை
கட்டிக்கொண்டது வெளுத்தது வானம்...
ஆண் வாசனை நுகரும் பெண் பூவாக
பெண் வாசனை வருடும் ஆண் தீவாக
மாறி போகிறது யாவும் யாதுமாகிறது தீவும் ...
நகக் கண்களில் முகம் பார்க்கும் மேகம்
சூல் கொள்கிறது கனவுகள் யாவும் ...
யாமத்தில் விழித்து இரவு ஆலமரத்தின் விழுதில்
ஊஞ்சலாடுகிறது காமம் ...
அசைத்து விட்டு ஓடி ஒளிந்துகொள்ளும்
சிறுதூறலாக நெற்றிதொட்டு கீழிறங்குகிறது அச்சம் ...
ஆண் இருட்டை பெண் இருட்டு போர்த்திக்கொள்ள
தீபத்தின் சுடரெங்கும் நாணம் ...
ஆண் காதலை விட்டு சென்று பெண் காதலை
தூக்கி செல்கிறது காதல் ...
வெற்றிடங்களில் நிரம்பாமல் நிரம்புகிறது
பெண்ஆற்றை குடிக்கும் ஆண் ஆற்றின் மூர்க்கம் ...
- நாகா

No comments:

neelam enbathu song