Tuesday, May 29, 2018

07-03-2018
புதன்
ஒற்றையடிப்பாதை : 245
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
உடைந்த வளையல் துண்டு
கலைடாஸ்க்கோப்பில் கண்சிமிட்ட
உதிர்ந்த மல்லிகை மொட்டு
அரளி செடிக்கருகில் புன்னகைக்க
சிதறிய நிழல் விழுந்த நிலம்
விரிசல் விட்ட பாலத்தின் கீழ்
மணல்வெளியில் முளைவிட்டபடி வேர்த்துக்கிடக்க
நிறங்களின் கலவையில்
எழுந்து நிற்கும் சாயப்பட்டறை
சாயமற்ற பேச்சில் பேசிப்போக
நீரற்ற ஆற்றில் பிரதிபலிக்காத
மஞ்சள் நிலவை தேடி அலையும் ராத்திரியில்
இரவின் நிறம் நீலமாய் இருக்க வாய்ப்பில்லை
நீலம் நிறமல்ல வலி ..
- நாகா

No comments:

neelam enbathu song