Tuesday, May 29, 2018

22-04-2018
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 273
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
ஒற்றையடிபாதை விரித்த சிறகு
கண்ணாடி சட்டம் விட்டு வெளியேற முடியாமல்
பறந்து கொண்டிருக்கிறது அந்த பறவை ...
விழி நிறைந்து தளும்பும் தருணத்தில்
உடைப்படலாம் அதன் விலங்கு ...
நீலம் போர்த்திய வானம் ஏதும் கேட்கவில்லை என்னிடம்
பறவை மட்டுமே ஆயிரம் வினாக்களுடன்...
வலசை திரும்பும் அதன் இலக்கில்
உடைபட்டு நசுங்கிலாம் ஆகாயம் ...
நீரில் அலசி அடுத்த வண்ணம் சேர்க்க
ஆரம்பித்திருந்தது தூரிகை ...
இப்போது அது சிங்கத்தின் பிடரியை
வரைய ஆரம்பித்தது ....
வேடன் ஒருவன் வலைவீசிக்கொண்டிருக்க
அச்சம் இல்லாமல் பறந்துகொண்டுதான்
இருந்தது அந்த பறவை சுதந்திரமாய்...
- நாகா

No comments:

neelam enbathu song