Tuesday, May 29, 2018

15-04-2018
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 269
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
எருக்கஞ்செடிக்குள்ளிருந்து
எட்டிப்பார்க்கிறது ஒரு கருப்பு எறும்பு...
லேசாக வழியும் வெள்ளை நிறத்து பாலில்
மூழ்கி திளைக்கிறது அது மூச்சு முட்டும்வரை ...
ஊமத்தம் பூவின் வாசனை
அதன் மேனியெங்கும் படிந்து கிடந்தது ..
ஒரு மழை மேகம் போர்த்திச்செல்லும்
கத்தரி நேரத்தில் அதன் பயணம் ஆரம்பமானது ..
செம்பருத்தியின் நிறம் தென்படாத நிழல்
சுடுமணலை செம்புலமாக்கி கொண்டிருந்தது ...
வியர்வை துடைத்து நடக்கும் வீதியில்
நகர்ந்து போகும் எறும்புகளுக்கும்
நிறம் இருக்கவே செய்கிறது
வானவில் நிறத்தில் தெரிவதில்லை நிழல்...
- நாகா

No comments:

neelam enbathu song