Tuesday, May 29, 2018

1-03-2018
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 247
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
குரல்களால் தூசு படிந்து கிடக்கிறது
யாரும் விளையாடாத அந்த மைதானம்...
உடைந்த மதில் சுவரில் கடந்த தேர்தலில்
சுயேட்சையாய் நின்றவரின் கட்சி சின்னம்
முள் செடிகளுக்கு மத்தியில் மறைந்து கிடந்தது
கூட்டணிவைக்காத அவரை போல....
விடுமுறையில் அதிகாலையில் கண்விழிக்கும்
நள்ளிரவு தெருநாய் குறைப்பில் புரண்டு படுக்கும்..
டென்னிஸ் பந்தில் கிரிக்கெட்
முட்டி சிராய்த்த சைக்கிள் பயிற்சி
முனைமுறிந்த நினைவில் தலைப்பிரட்டையாக ...
எருக்கஞ்செடிகளை அனுமதித்த அதன் இருப்பில்
இப்போது பாம்புகளும் இருப்பதாய் கேள்வி...
அப்போது பயத்துடன் உள்ளிருப்பேன்
இப்போது பயத்துடன் கடந்து போகிறேன் ...
இப்போது சொல்லித்தான் தீர வேண்டும்
அந்த மைதானம் குடியிருப்புகளுக்கு பக்கத்தில்
அந்நியப்பட்டுக் கொண்டிருப்பதை ....
- நாகா

No comments:

neelam enbathu song