0-11-2017
வியாழன்
ஒற்றையடிப்பாதை : 187
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
மாங்கொட்டையை நட்டுவைத்து
தூங்கிய அந்த ராத்திரி
சொப்பனம் முழுக்க
மாம்பழங்களால் நிரம்பி வழிந்தது....
பிஞ்சு பூக்கள் உதிர்ந்த நிலமெங்கும்
காற்றில் மிதந்து வந்தது மாமரத்து வாசனை...
நிலைப்படிதாண்டி உள் நுழைகையில்
தலைத்தட்டி சிரித்தது தோரணம் ...
உள்ளங்கை உப்பில் தோய்ந்த மாங்காய்
ஊறுகாய் ஜாடி தாண்டி எச்சில் ஊற வைத்தது ..
தோட்டக்காரனுக்கு தெரியாமல்
பறித்தபோது சிக்கிக்கொண்டது புளிப்பு ...
புளியங்கோட்டை விழுங்கியபோது
அடிவயிறு தடவி இறங்கிய பயம்
மாங்கொட்டையில் எட்டிப்பார்க்காதது ஆறுதல்...
மாமர நிழலும் கயிற்று கட்டிலுமான வாழ்வு
தூக்கத்தை கடன் வாங்க முயற்சித்தது ..
படுக்கை முழுக்க செந்தூராக்களும்
பங்கனபள்ளிகளும் ருமானிகளுமாக நெளிந்தது..
கண்விழித்ததும் மாங்கொட்டையை
தூக்கி கடாச வேண்டும் முதலில்…
தூக்கத்தில் வளரும் மாந்தோப்பில்
தொலைந்து போகலாம் ஒருவேளை நான் ...
தூங்கிய அந்த ராத்திரி
சொப்பனம் முழுக்க
மாம்பழங்களால் நிரம்பி வழிந்தது....
பிஞ்சு பூக்கள் உதிர்ந்த நிலமெங்கும்
காற்றில் மிதந்து வந்தது மாமரத்து வாசனை...
நிலைப்படிதாண்டி உள் நுழைகையில்
தலைத்தட்டி சிரித்தது தோரணம் ...
உள்ளங்கை உப்பில் தோய்ந்த மாங்காய்
ஊறுகாய் ஜாடி தாண்டி எச்சில் ஊற வைத்தது ..
தோட்டக்காரனுக்கு தெரியாமல்
பறித்தபோது சிக்கிக்கொண்டது புளிப்பு ...
புளியங்கோட்டை விழுங்கியபோது
அடிவயிறு தடவி இறங்கிய பயம்
மாங்கொட்டையில் எட்டிப்பார்க்காதது ஆறுதல்...
மாமர நிழலும் கயிற்று கட்டிலுமான வாழ்வு
தூக்கத்தை கடன் வாங்க முயற்சித்தது ..
படுக்கை முழுக்க செந்தூராக்களும்
பங்கனபள்ளிகளும் ருமானிகளுமாக நெளிந்தது..
கண்விழித்ததும் மாங்கொட்டையை
தூக்கி கடாச வேண்டும் முதலில்…
தூக்கத்தில் வளரும் மாந்தோப்பில்
தொலைந்து போகலாம் ஒருவேளை நான் ...
- நாகா
No comments:
Post a Comment