Thursday, July 26, 2018

25 -12-2017 திங்கள் ஒற்றையடிப்பாதை : 202 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...

25 -12-2017
திங்கள்
ஒற்றையடிப்பாதை : 202
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
ஒரு வெற்றிலை கொஞ்சம் மை
போதுமானது பக்கிரிசாமிக்கு
தொலைந்தவைகளை கண்டுபிடிக்க ..
மந்தையில் காணாமல் போன
ஆட்டுக்குட்டியில் இருந்து
களவு போனதாய் நினைத்த
சின்னாளம்பட்டி சித்தியின் கல்வைத்த கம்மல் வரை
உள்ளங்கைக்குள் கொண்டு வரும் லாவகம்
ஊரே ஒரு வெற்றிலைக்குள் அடங்கி கிடந்தது ...
தேடுதல் இல்லாதவர்களிடமும்
தொலைந்து கொண்டுதான் இருந்தது ஏதோஒன்று ..
இதுநாள் வரை அகப்படாத
திருவிழாவில் தொலைந்த சோமுவாகட்டும்
கைக்குழந்தையில் விட்டு போனவன்
மகள் கல்யாணத்திலாவது வந்துசேருவான்
காத்திருக்கும் செங்கமலமாகட்டும்
விதிவிலக்குகளை கடந்து
எரிந்துகொண்டுதான் இருக்கிறது
பக்கிரி சாமி வீட்டு விளக்கு ..
ஒரு நாள் பாக்கிரிசாமி காணாமல் போய்விட்டதாய்
பேசிக்கொண்டது ஊர்...
எங்கே தொலைந்தார் என்பதைவிட
எங்கு தொலைத்தோம் என்பதில்
ஆர்வம் காட்டியது ஆச்சர்யம் ...
வெற்றிலையில் காம்பு கிள்ளும் பெரியாத்தா கிழவி
முதல் முறையாக அழ ஆரம்பிக்கிறாள் ..
கண்டுபிடித்தவனை தொலைத்த வேதனையில் இல்லை
வெற்றிலை காடு குத்தகைக்கு கைமாறிப்போன வேதனையில் ....
- நாகா

No comments:

neelam enbathu song