Thursday, July 26, 2018

24 -12-2017 ஞாயிறு ஒற்றையடிப்பாதை : 201 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...

24 -12-2017
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 201
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
அந்த சூனியக்கார கிழவியின்
மந்திரக்கோலை நேற்று களவாடிவிட்டேன் ...
உடைந்த சாபங்களை ஒட்டி
வரங்களுக்காக யாகம் வளர்க்க தொடங்கினாள்...
கொழுந்துவிட்டு எரியும் ஜுவாலையில்
ஒரு கணம் தேவதையாக தெரிந்து
மறைந்தது அவளின் பிம்பம் ...
களவாடியவனை கண்டுபிடிக்கும்
அவளின் தேடுதல் வேரில்
பூக்க ஆரம்பித்தது வன்ம பூக்கள் ...
தேவதைகளை சபிக்கும் அவள்
மெல்ல தேவதையாகி கொண்டிருந்தாள்
அவளுக்கே தெரியாமல் ...
ஒவ்வொரு விரலிலும் யானைகளை
மோதிரங்களாக மாட்டிக்கொண்டிருந்தாள்...
இதுநாள் வரை இருட்டில் நனைந்திருந்த
அவள் வீட்டில் முதல் முறையாக
எரிய ஆரம்பித்தது விளக்கு ...
வனம் நுழைந்த களிறாக
பிளிற ஆரம்பித்தது அவளின் நிகழ்...
என்னிடம் இருந்து தப்பிச்செல்ல
பிரியம் காட்டாத அவளிடம்
தொலைய ஆரம்பிக்கிறேன் முதல்முறையாக ...
- நாகா

No comments:

neelam enbathu song