19-11-2017
ஞாயிறு
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 178
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
உச்சி உரசிய ஆகாயத்தை
கிள்ளியெறிந்த ஒத்தக்கண்ணன் கதையை
வெற்றிலை சாறு படிந்த உதட்டுடன்
சொல்லிச்செல்கிறாள் அப்பத்தா...
ஊருக்கு தெற்கில் ஒற்றைப்பனைமரத்தில்
முனி குடியிருப்பதாய் உலவும் செய்தியில்
இரண்டாம் ஆட்ட சினிமா
இன்னும் ஞாபகம் வருவதாக
சித்தப்பா சொல்லும் கதையில்
அரை டிராயர் நனையும் பலருக்கு ...
ஒற்றையடி பாதையும் சிதையெறியும் மயானமும்
அமாவாசை இரவுகளை
சாளரம் வழியே வீசி விட்டு செல்லும் ...
தனிமை வனத்தில் முளைக்க ஆரம்பிக்கிறது
கிளைவிரிக்க தொடங்கும் பயங்களின் வேர்...
பேய்களை கணக்கெடுப்பவனிடம் நின்று
பதில் சொல்லிக் கொண்டிருப்பதில்லை பேய்கள்...
கிள்ளியெறிந்த ஒத்தக்கண்ணன் கதையை
வெற்றிலை சாறு படிந்த உதட்டுடன்
சொல்லிச்செல்கிறாள் அப்பத்தா...
ஊருக்கு தெற்கில் ஒற்றைப்பனைமரத்தில்
முனி குடியிருப்பதாய் உலவும் செய்தியில்
இரண்டாம் ஆட்ட சினிமா
இன்னும் ஞாபகம் வருவதாக
சித்தப்பா சொல்லும் கதையில்
அரை டிராயர் நனையும் பலருக்கு ...
ஒற்றையடி பாதையும் சிதையெறியும் மயானமும்
அமாவாசை இரவுகளை
சாளரம் வழியே வீசி விட்டு செல்லும் ...
தனிமை வனத்தில் முளைக்க ஆரம்பிக்கிறது
கிளைவிரிக்க தொடங்கும் பயங்களின் வேர்...
பேய்களை கணக்கெடுப்பவனிடம் நின்று
பதில் சொல்லிக் கொண்டிருப்பதில்லை பேய்கள்...
-நாகா
No comments:
Post a Comment