Thursday, July 26, 2018

28-11-2017 செவ்வாய் ஒற்றையடிப்பாதை : 185 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...

28-11-2017
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை : 185
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
நிழல் பொறுக்கும் வேலை
நிதானமாக கழிகிறது
அந்த மரத்தின் கீழே
மருதாணி இடுகிறது ஒரு இலையுதிர்காலம்.. ..
கருப்பு நிழலை தாங்கி கொண்டிருக்கும்
பச்சை புல்வெளி எங்கும்
ஈரமாய் வெள்ளை பனித்துளிகள் ...
சருகுகளில் அமர்ந்து போகும் காற்று
ஒரு வனத்தின் கதையை எழுதி செல்கிறது ...
வாசிக்கும் உதடுகளில்
வசந்த காலத்தின் நடுக்கம் ...
உதிர்ந்த இறகுகள்
ஆகாயத்தின் நிறமாற்றங்களை
தாமதமில்லாமல் சொல்ல முயலும் ...
கிழிந்த ஒரு துண்டு காகிதத்தில்
ஏதோ சிலவரிகள்
ஒரு கவிஞனை கடத்தி வருகிறது ...
யாருக்கும் தெரியாமல்
பொந்துக்குள் இருந்து எட்டிப்பார்க்கும்
அந்த சின்ன அணிலை போல
எல்லாம் நிகழ்ந்துவிடுகிறது அவசர அவசரமாக ...
- நாகா

No comments:

neelam enbathu song