Thursday, July 26, 2018

27-11-2017 திங்கள் ஒற்றையடிப்பாதை : 184 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...

27-11-2017
திங்கள்
ஒற்றையடிப்பாதை : 184
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...

குருவி ரொட்டி குச்சி மிட்டாய்
அருவிக்கரையோர நாணல்
நுணாப்பழம் கருவேலமுள் கள்ளிச்செடி
ஒற்றையடிப்பாதையாய் காதல்...
நடைவண்டி நாயர் கடை தேநீர்விடுதி
அரச இலை உள்ளங்கை பதம் பார்த்த
வெண்பொங்கல் குளம் மிதந்த அல்லி
நினைவில் உதிக்கும்
அப்பா இன்னபிற நண்பர்கள் ...
பண்டிகைநாள் அரிசி கோலம்
இழுத்து செல்லும் எறும்பு
மாடத்தில் எரியும் விளக்கு தோட்டத்து காசித்தும்பை
விட்டிலாய் சிறகு விரிக்கும்
அக்கா அம்மா ...
கார்கண்ணாடியில் எழுதிய
புழுதியில் நெளியும் பெயராக
ஒரு பயணத்தை கொண்டுவந்து
சேர்க்கிறது அந்த சாலை ...
தனிமையில் கடந்து போகும்
அந்த வாகனத்தின் முகப்பு விளக்காக
ஒளிபாய்ச்சி செல்கிறது ஒவ்வொரு முறையும் ...
அதிர்ந்து குலுங்கி இருட்டில் தொலையும்
ஒரு யாத்திரையை சொல்ல நினைப்பதில்லை
இந்த கவிதையின் நோக்கம் ...
காத்திருக்கும் மரங்களின் கிளைகளில்
கூடுகட்டும் பறவைகளைதேடும்
ஒரு ஆதிமரத்தின் வேரின் ஏக்கம் என்க....
- நாகா

No comments:

neelam enbathu song