31 -12-2017
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 206
ஞாயிறு
ஒற்றையடிப்பாதை : 206
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
அடம்பிடித்து வாங்கிய பலூன்
நிரம்பிய காற்றில் மிதக்கிறது ஆசை...
புத்தக பக்கங்களில் ஒற்றை இறகில்
தோகை விரிக்கிறது மயில் ...
கை நிறைய அள்ளி பருகும்போது
சிந்தி சிதறுகிறது தாகம் ....
புள்ளியாய் நுழைந்து
யாதுமாகிறது ஆகாயம்...
வாரி சுருட்டிக்கொண்டு ஓடும் நதி
பின்தொடரும் நிழலாகிறது பயணம் ...
விருட்சங்களின் விழுதில்
ஊஞ்சலாடுகிறது விதைகளின் கதை...
தொட்டிச்செடியாகும் கனவில்
அமர்ந்து போகிறது நேற்றுகளின் தட்டான் ...
தலைத்தட்டும் மேகத்தின் நிழலில்
இரைதேடும் எறும்பாகிறது வாழ்க்கை ...
நிரம்பிய காற்றில் மிதக்கிறது ஆசை...
புத்தக பக்கங்களில் ஒற்றை இறகில்
தோகை விரிக்கிறது மயில் ...
கை நிறைய அள்ளி பருகும்போது
சிந்தி சிதறுகிறது தாகம் ....
புள்ளியாய் நுழைந்து
யாதுமாகிறது ஆகாயம்...
வாரி சுருட்டிக்கொண்டு ஓடும் நதி
பின்தொடரும் நிழலாகிறது பயணம் ...
விருட்சங்களின் விழுதில்
ஊஞ்சலாடுகிறது விதைகளின் கதை...
தொட்டிச்செடியாகும் கனவில்
அமர்ந்து போகிறது நேற்றுகளின் தட்டான் ...
தலைத்தட்டும் மேகத்தின் நிழலில்
இரைதேடும் எறும்பாகிறது வாழ்க்கை ...
- நாகா
No comments:
Post a Comment