Wednesday, July 25, 2018

09 -01-2018 செவ்வாய் ஒற்றையடிப்பாதை : 212 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...

09 -01-2018
செவ்வாய்
ஒற்றையடிப்பாதை : 212
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
ஊடலுக்கு பிறகான நிமித்தங்களில்
தொடர்கிறது அதுவும் இன்னபிறவும் ....
உம் , ஆம் , சரி ஒற்றை சொற்களில்
நூலாம்படையாகிறது மௌனம் ...
தொலைந்த கணையாழியாய்
துஷ்யந்த காதலை விதைத்துப்போகிறது நிமிடம்...
காயப்படுத்திய அவனையும்
கண்ணீர் கொடுத்த நிமிடங்களையும்
பிரித்தெடுக்கிறாள் ஒரு அன்னப்பறவையை போல...
அடிக்கடி நிகழ்வதுதான் இருந்தாலும்
கோபங்களை பலநேரம்
செல்லமாய் எடுத்துக்கொள்ள முடியவில்லை...
உலர்ந்த உதடுகளை ஈரப்படுத்தும் காதல்
அவனின் மன்னிப்புகளில் பூக்க ஆரம்பிக்கிறது ..
ஒரு கல்யாணத்திற்கு பிறகான நேசம்
கூந்தல் முடிக்கிறது எல்லாம்
இயல்பாய் இருப்பதாய் நினைத்து ....
- நாகா

No comments:

neelam enbathu song