Thursday, July 26, 2018

22-11-2017 புதன் ஒற்றையடிப்பாதை : 181 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...


22-11-2017
புதன்
ஒற்றையடிப்பாதை : 181
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
பார்வையாளரின் வரிசையில் இருந்து
ஒலிக்க ஆரம்பிக்கிறது அந்த குரல்...
இருட்டுக்குள் வியாபித்திருக்கும்
அந்த அறைக்குள் அனாதையாய்
சுவர் மோதி விழுகிறது அது ..
மேடையை ஒப்பனைகளால்
வெளிச்சப்படுத்திய குரல்களில்
எடுபடாமல் போகிறது அதன் நிறம் ...
சன்னமாய் ஒலிக்கும் அந்த தனிமை
நனைக்க ஆரம்பித்தது கூட்டத்தை ...
ஒளிந்துகொள்ளும் குரலில்
வெளிப்படுகின்றன உருவங்கள் ...
சத்தமாய் அடங்க மறுத்த
வெளிச்சம் தோய்ந்த குரலில்
பதுங்கிக்கொண்டது அது
பூனையின் பின் ஒளியும் எலி போல...
குரல்களை உருவாக்குப்பவனிடம் இருந்து
ஒலிக்க ஆரம்பிக்கிறது மௌனத்தின் குரல் ....
- நாகா

No comments:

neelam enbathu song