Thursday, July 26, 2018

04-12-2017 திங்கள் ஒற்றையடிப்பாதை : 189 தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...


04-12-2017
திங்கள்
ஒற்றையடிப்பாதை : 189
தமிழ் 89.4 பண்பலை நமது “வானவில்” நிகழ்ச்சியில் இடம் பெற்ற நிறைவு கவிதை ...
கூட்டத்தில் தனித்து நிற்கும்
ஒரு மழைக்கால தூறலைபோல
நனைத்து போனது அந்த பறவையை அந்த மேகம் ..
சிறகு முழுக்க மழை சுமக்கும்
ஒரு விட்டில் ராத்திரியில் அதன் கூடெங்கும்
நிரம்பியது நதியின் புல்லாங்குழல் ....
வானத்தின் கிளைகளில் இளைப்பாறும்
அதன் திசையெங்கும் இசையின் முகவரி ...
துளைவழியே ஓடும் தாகத்தின் குறுக்கே
விக்கி நிற்கிறது வறண்ட நதியின் ஞாபகம்...
நடைவண்டிகளில் சிக்கிய கடையாணியாக
கடந்து போகிறது கண்ணாமுச்சி நினைவு ...
ஒரு பறவையை கல்லால் அடிக்கிற
கவனில் இருந்து கிளம்பும்
சொல்லாகலாம் இந்த கவிதை ...
காதுகுடையும் இறகில் இருந்து
இறங்கி வருகிறது ஒரு பறவையின் வரலாறு ...
- நாகா

No comments:

neelam enbathu song